சிவானந்தாவில் சுவாமி விவேகானந்தரின் 125 ஆண்டு இலங்கை வருகை நிறைவு விழா!



காரைதீவு சகா-
வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கை வருகையின் 125வது ஆண்டு நிறைவு விழாவின் ஓரங்கமாக மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்யாலயத்தில் சிறப்பு விழா நேற்று இடம்பெற்றது.

ராமகிருஷ்ணா மிஷன் இலங்கைக்கான தலைவர்
சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் ஆசியுரை வழங்கினார்.

முன்னதாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலை இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக சிவானந்தா வித்யாலயாலய சுவாமி நடராஜானந்தா மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அங்கு பஞ்சாராத்தி மலர் அஞ்சலி மலர்மாலை சூட்டப்பட்டு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து பிரதி அதிபர் கே.சுவர்ணேஸ்வரன் வரவேற்பு உரையாற்ற கல்லடி இராமகிருஷ்ண மிஷன் குருகுல உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அறிமுக உரை ஆற்றினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின.

சுவாமி விவேகானந்தரின் mind your mind சிகாகோ சொற்பொழிவு காணொளி காண்பிக்கப்பட்டது. சாதனை மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பழைய மாணவர் சார்பில் ச.சந்திரகுமார் எஸ்.ஹரிதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :