ஜனாதிபதி ரணிலின் கடிதம் ஐக்கிய அரபு இராச்சிய அதிபரிடம் கையளிப்பு. அமைச்சர் நசீர் அந்நாட்டு வெளிநாட்டமைச்சருடனும் நேரில் பேச்சு
ஏறாவூர் சாதிக் அகமட்-
னாதிபதியின் விஷேட தூதுவராக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்,ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிபருக்கு (அமீர்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுதிய விஷேட கடிதத்தைக் கையளித்தார்.

அந்நாட்டின் வெளிநாட்டமைச்சரும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான மாட்சிமைமிகு அப்துல் பின் ஷெய்யத் அல் நஹ்யானிடம் அக்கடிதம் கையளிக்கப்பட்டது.

இரு நாடுகளின் உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபியில் இடம்பெற்ற சந்திப்பில் பல தரப்பு விடயங்கள் குறித்து அமைச்சர் நஸீர் அஹமட்டும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டமைச்சரும் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில், இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து அமைச்சர் நஸீர் அஹமட் விளக்கினார்.

அத்துடன், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து விளக்கிய அமைச்சர், அதற்கான தீர்வுகள் குறித்தும் எடுத்துரைத்து ஐக்கிய அரபு ராச்சியத்தின் உதவிகளைப் பெறுவது தொடர்பில் அக்கறை செலுத்துமாறும் கோரினார்.

பிராந்திய மற்றும் சர்வதேசத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புக்களுடன் பல்துறைகளில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை, இவ்வாறான விடயங்களுக்கு ஒத்துழைப்பதில் இலங்கைக்குள்ள ஆர்வங்களையும் அமைச்சர் விளக்கியமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத்தூதுவர் மஹாதேவி பீரிஸும் கலந்துகொண்டார்.

இச்சந்திப்புக்கள் இலங்கைக்கு சாதகமான பலன்களை தரக்கூடிய வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :