பிரித்தானியாவின் 2ஆம் எலிசபத் மகாராணியாரின் மரணமான செய்தி கேட்டு உலக நாடுகளில் அவருக்கா மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த வகையில் இலங்கையிலும் அவருக்கு பல இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. கொழும்பு போதி ராஜ மாவத்தையில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக தோல் பொருட்களில் செய்யப்பட்ட பேக் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வரும் ஜினதாஸ என்பவர் பிரித்தானிய மகாராணி பரம்பரையில் அன்பும் ஆசையும் கொண்டு வந்துள்ளார். இவர் பிரித்தானிய இளவரசி மற்றும் அவரது குடும்பங்களின் நிழற்படங்களை சேகரித்தும் வைத்துள்ளார்.
ஜினதாஸ என்பவர் இன்று புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் அவரது கடை இருந்த இடத்தில் பிரித்தானி மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவப்பட பெனர்களை காட்சிப்படுத்தியும் அவரால் சேகரிக்கப்பட்ட இளவரசி குடும்பத்தின் நிழற்படங்கள் செய்திகள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து அவருக்கு தீப்பந்த சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய காட்சி எமது கமறாவில் ஒளிப்பதிவானது.
ஜினதாஸ அவர்கள் பாதைகளில் சென்றவர்களுக்கு பிரித்தானி குடும்பத்தின் வரலாற்று விளக்கங்களையும் வழங்கியிருந்தார்.
ஜினதாஸவின் போதி ராஜ மாவத்தையில் உள்ள கடை சில மாதங்களுக்கு முன் தீயினால் எரிந்து முற்றாக அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment