கல்முனை அல் -பஹ்றியா தேசிய பாடசாலையில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த பெருவிளையாட்டு மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டுக்கான புதிய சீருடை அறிமுகம் இன்று (16) பாடசாலையில் இடம்பெற்றது
பாடசாலையின் விளையாட்டு குழுவின் வேண்டு கோளுக்கு இணங்கFRIENDS ACHIEVEMENT WELFARE SOCIETY (FAWS) அமைப்பினர் மற்றும் கட்டார் வாழ் பாடசாலையின் பழைய மாணவர்களும் இணைந்து பாடசாலைக்கு தேவையான பெருவிளையாட்டு மேலங்கியையும்,மெய்வல்லுநர் மேலங்கியினையும் வழங்கி வைத்ததுடன் மேலங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் பைசால் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது பாடசாலை அபிவிருத்தி குழுவினர்கள் ,பழைய மாணவர்கள் சங்கத்தினர்கள்,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள், நலம்பிரும்பிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment