அனுராதபுர Heritage Village Hotel ல் நீதி மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து உலக சுகாதார அமைப்பின் (WHO)யின் அனுசரணையுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு நேற்று (03/09) நடைபெற்றது.
இந் நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் Dr லக்ஸ்மி சோமதுங்க , Consultant community physician Dr கேசவன் ரட்ணசபாபதிப்பிள்ளை , யாழ் போதனா வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி Dr செல்லையா பிரணவன் மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.
மரண விசாரணைகளின் பின்னர், மரணத்திற்கான காரணங்கள் எழுதும் புதிய நடைமுறைகள் மற்றும் மரணப் பதிவுகள் சர்வதேச தரத்தில் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்ற விளக்கவுரைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
35 க்கும் மேற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள் கலந்து கொண்ட இந் நிகழ்வின் முடிவில் சுகாதார அமைச்சினால் அனைவருக்குமான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment