க‌ல்முனை செய‌ல‌க‌ விடயத்தில் த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றுவ‌து நிறுத்த‌ப்ப‌ட‌ வேண்டும். ஐக்கிய‌ காங்கிர‌ஸ்க‌ல்முனை செய‌ல‌க‌ம் வ‌ட‌க்கு எனும் பெய‌ரில் செய‌ல‌க‌ம் ஒன்று இல்லை என‌ உள்நாட்ட‌லுவ‌ல்க‌ள் ராஜாங்க‌ அமைச்சு தெளிவாக‌ அறிவித்திருக்கும் நிலையில் க‌ல்முனை த‌மிழ் செய‌ல‌க‌ம் என்றும் வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்றும் த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றுவ‌து நிறுத்த‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொண்டுள்ள‌து.

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் இது ப‌ற்றி தெரிவிக்கையில்,

யானை வ‌ரும் பின்னே ம‌ணியோசை வ‌ரும் முன்னே என்ப‌து போல் தேர்த‌ல் வ‌ர‌ப்போகிற‌து என்ற‌தும் க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என‌ த‌மிழ் க‌ட்சிக‌ள் தூக்கிப்பிடிப்ப‌தும், விட்டேனா பார் என‌ முஸ்லிம் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் ம‌ல்லுக்கு நிற்ப‌தும் வ‌ழ‌மையான‌ ஒன்று.

2021ம் ஆண்டு ஒக்டோப‌ர் மாத‌ம் 15ம் திக‌தி, த‌க‌வ‌ல் அறியும் ச‌ட்ட‌ம் மூல‌ம் நிப்ராஸ் ம‌ன்சூர் என்ப‌வ‌ருக்கு உள்நாட்ட‌லுவ‌ல்க‌ள் ராஜாங்க‌ அமைச்சு அனுப்பிய‌ க‌டித‌த்தில் க‌ல்முனை செய‌ல‌க‌ம்- வ‌ட‌க்கு என்ற‌ பெய‌ரில் செய‌ல‌க‌ம் இல்லை என்றும் இப்ப‌டியொரு செய‌ல‌க‌த்துக்கு அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை என்றும் தெளிவாக‌ உள்ள‌து.

இந்த‌ உண்மை த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கும் க‌ல்முனை உப‌ செய‌லாள‌ருக்கும் தெரியாதா என்று கேட்கிறோம்.

க‌ல்முனையில் இருப்ப‌து க‌ல்முனை செய‌ல‌க‌த்தின் உப‌ செய‌ல‌க‌ம்தானே த‌விர‌ அதுவும் இன‌ரீதியிலான‌ செய‌ல‌க‌ம் அல்ல‌. இந்த‌ உண்மையை க‌ல்முனை பிர‌தேச‌ செய‌லாள‌ரும், உப‌ செய‌லாள‌ரும் இணைந்து ஊட‌க‌ மாநாடு நடாத்தி இத‌னை நாட்டு ம‌க்க‌ளுக்கு தெளிவு ப‌டுத்தாம‌ல் இருப்ப‌து ஏன் என்ற‌ கேள்வி எழுகின்ற‌து.
இவ‌ர்க‌ளுக்கு இதுவெல்லாம் தெரியாதா அல்ல‌து அர‌சிய‌ல்வாதிக‌ளால் இவ‌ர்க‌ளின் வாய்க‌ளுக்கு முட்ட‌ப்ப‌ம் இட‌ப்ப‌ட்டுள்ள‌தா என‌ கேட்கிறோம்.

ஆக‌ குறைந்த‌து இவ‌ர்க‌ள் மும்மொழியிலும் இது ப‌ற்றி ஊட‌க‌ அறிக்கையொன்றையாவ‌து வெளியிட‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) கேட்டுக்கொள்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :