அம்பாரை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 05 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக மாணவர்களின் மீள் தன்மையை வளர்ப்பதற்குரிய சூழலை உருவாக்கும் நேக்கில் பல வேலைத்திட்டங்கள் SWOAD நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், இறக்காமம் பிரதேச செயலக பிரிவிலும் இவ் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் SWOAD நிறுவனத்தின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு இவ் வேலைத்திட்டம் பற்றிய அறிமுகத்தை வழங்கி வைத்தனர்.
சர்வதேச அரச சாற்பற்ற நிறுவனமான Helvetas இன் நிதி உதவியுடனும் வழிகாட்டலோடும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், கிராம நிலதாரிகளின் நிருவாக உத்தியோகத்தர் இந்திர ஸ்ரீ ஹெசேரத் பண்டார உட்பட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment