மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம் இடம்பெற்ற மதனராசா சிந்துஜன்பைஷல் இஸ்மாயில் –
ம்முறை வெளியாகியுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் மதனராசா சிந்துஜன் திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம் இடத்தினைப்பெற்றுள்ளார்.

வர்த்தகத்துறையில் கல்வி பயின்ற மாணவன் மதனராசா சிந்துஜன் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட ரீதியில் எட்டாம் இடத்தினைப்பெற்று பாடசாலைக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.
கல்வியை கற்க முன்னர் அதை சரியான முறையில் தேர்வுசெய்து, திட்டமிட்டு கற்கவேண்டும். கற்றல் செயற்பாடுகளை கஷ்டப்பட்டு முன்னெடுப்பதால் எந்தவித பிரயோசனமும் இல்லை. எனது சிறிய வயதில் தந்தையை இழந்து, தாயின் அயராத உழைப்புக்கு மத்தியில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு இந்த நிலைமையை அடைந்துள்ளேன் என்று அம்மாணவன் தெரிவித்தார்.

வறுமை கல்விக்கு தடையில்லை என்பதை மதனராசா சிந்துஜன் போன்ற பல மாணவர்கள் இம்முறை வெளியான பெறுபேறுகள் மூலம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :