ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் கிண்ணியாவில் சிவில் சமூக நிறுவனங்களின் திறன் விருத்தியை அதிகரிக்கும் செயலமர்வு.



ஹஸ்பர்-
க்கிய அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் கிண்ணியா அமைப்பினரின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிவில் சமூக அமைப்புகளின் திறன் விருத்தியை மேம்படுத்தும் செயலமர்வொன்று கிண்ணியா விஷன் மண்டபத்தில் இன்று (01) நடைபெற்றது.

PEACE எனும் இப்புதிய செயற்திட்டம் சமூகத்தின் ஒன்றிணைக்கப்பட்ட செயற்பாடுகளை வலுவூட்டுவதற்கான மக்களின் ஈடுபாட்டை மேம்படுத்தல்
People’s Engagement and Action For Civic Empowerment(PEACE) எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 20 சிவில் சமூக அமைப்புகளை ஜனநாயக மற்றும் அபிவிருத்தி துறையில் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேற்படி நிகழ்ச்சியில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பிரதேச செயலகங்களிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 20 சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் ஆகியோரின் தலைமையில் சிவில் சமூக நிறுவனங்களின் திறன் விருத்தியை அதிகரிக்கும் நோக்கில் திருகோணமலை சிவில் மன்றம் (Trinco Civic Forum) என்ற அமைப்பொன்று உருவாக்கப்பட்டது.

இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பயனாளிகளின் விபரங்களைத் திரட்டல், சிவில் சமூக அமைப்புகளின் திறன் விருத்தியை மேம்படுத்தும் பணியினை ஆரம்பித்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வின் வளவாளராக திரு. சுஜீவன் சித்ரவேல் மற்றும் அவரோடு கடமையாற்றும் திரு. மதியழகன், நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷிக் அலாப்தீன், கணக்கு உதவியாளர் நிஷாத் சுபைர் மற்றும் ஊடக அதிகாரி ஆதில் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :