இம்முறை வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றின்படி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் 21 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 24 மாணைவிகள் தோற்றியிருந்தனர். அதில் மூன்று மாணவிகள் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதோடு, 21 மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்ல தகுதியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துத் தந்த மாணவிகளுக்கும் மாணவிகளை வழிப்படுத்திய பகுதித் தலைவர் எஸ்.பாறூக் கான் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் ஒத்துழைப்புகளை வழங்கிய பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment