மாவடிப்பள்ளியில் கல்வியாளர்கள் பாராட்டி கெளரவிப்பு.நூருல் ஹுதா உமர்-
காரைதீவு- மாவடிப்பள்ளி மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாவடிப்பள்ளியில் இருந்து கல்வித்துறையில் சாதனை செய்தவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கழகத்தின் தலைவர் அஷ்ரப் பலாஹி தலைமையில் மாவடிப்பள்ளி கமு /அல்- அஸ்ரப் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மாவடிப்பள்ளியில் இருந்து மகப்பேறு மருத்துவராக தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் ஹஸ்னி அயூப்கான், பேராதனை பல்கலைக்கழகத்தின் அரபு மொழியில் கலாநிதி பட்டம் பெற்ற எம்.எஸ்.எம். சலீம் மற்றும் இம்முறை வெளியாகிய உயர் தர பரீட்சை முடிவுகளின்‌ ஊடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி எம்.எஸ்.எப்.நஸ்கா மற்றும் கணித பிரிவு, கலைப்பிரிவு என பல துறைகளிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவ மாணவிகள் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகள், மெளலவி, அல்- ஹாபிழ் மற்றும் ஆசிரியர் துறையில் இருந்து இளைப்பாறிய ஆசிரியர் யாக்குப் எஸ் ஹஸன் ஆகிய இன்னும் பல கல்விச் சாதனையாளர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மனித உரிமை ஆணையத்தின் கிழக்கு மாகாண உறுப்பினர் ஏ.எல்.எம் இஸ்ஸதீன் மற்றும் அனுசரணையாளர்களான மை கோல நிறுவனத்தின் கல்முனை பிராந்திய வினியோகஸ்தர் ரைஹாம், எப்.எஸ்.கே. நிறுவனத்தின் உரிமையாளரும் சமூக சேவையாளருமான கால்டீன் மற்றும் ரிப்பில் எச். நிறுவனம் உரிமையாளர் கே.எம்.இல்லியாஸ் மற்றும் எமது பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் மற்றும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :