முன்பள்ளி பாடசாலையின் சிறுவர் சந்தையும் கண்காட்சியும்ஹஸ்பர்-
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெள்ளைமணல் நீரோட்டு முனை சுவீட் கிட்ஸ் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை மற்றும் கைப்பணி கண்காட்சியும் இன்று (15) இடம் பெற்றது.

குறித்த சந்தை நிகழ்வானது பாலர் பாடசாலையின் ஆசிரியை எம்.ஐ.இப்திகா பேகம் தலைமையில் இடம் பெற்றது.
இதில் சிறுவர்களின் மூலமாக சிறிய வகை பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகள் என பல உற்பத்திகளை கொண்டதுமான பொருட்களை காட்சிப்படுத்தினர்.
இதில் பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம்.நௌபர், தனியார் நிறுவன தேசிய பணிப்பாளர் ஏ.ஹிதாயத்துள்ளா ,சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் கே.அமுதியா உட்பட பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :