இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சம்மேளனம் நாடு தழுவிய ரீதியில் ஒழுங்கு செய்திருந்த 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கேகாலை றுவன்வெல்ல ராஜசிங்க மகா வித்தியாலய அணியை மாத்தளை ஸாஹிராக் கல்லூரி அணி 13 ஓட்டங்களினால் வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மாத்தளை இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாத்தளை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாத்தளை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர்
33.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை பெற்றனர்.
துடுப்பாட்டத்தில் மாத்தளை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணி சார்பில் எம்.றிஹாம் 38 ஓட்டங்களையும் , உஸ்மான் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பாடிய கேகாலை றுவன்வெல்ல ராஜசிங்க மகா வித்தியாலய அணியினர் 32.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
இதில் மாத்தளை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணி சார்பில் ஐமன் 4 விக்கட்டுக்களையும், அக்ரம் 3 விக்கட்டுக்களையும் அஹ்மத் 2 விக்கட்டுக்களையும் துலக்ஸன் 1 விக்கட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
மாத்தளை ஸாஹிராக் கல்லூரி அணிக்கு பாடசாலை உடற்கல்வித்துறை ஆசிரியர் எம்.எஸ்.எம்.நுபைஸ் பொறுப்பாசிரியராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment