நாளை மட்டக்களப்பு ஈச்சர ஆலய செந்தமிழ் ஆகம இறை நன்னீராட்டு பெருவிழாவி.ரி. சகாதேவராஜா-
ட்டக்களப்பு மயிலம்பாவெளி சவுக்கடியில் எழுந்தருளி உள்ள மட்டக்களப்பு ஈச்சர ஆலயத்திற்கான இறை நன்னீராட்டுப் பெரு விழா செந்தமிழ் ஆகம முறைப்படி நாளை சனிக்கிழமை (10) நடைபெற இருக்கின்றது .

மட்டக்களப்பு ஆதீனத்தின் ஸ்தாபக தலைவரும், பணிப்பாளருமான மு.ஜெயபாலன் முன்னிலையில் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் 9:30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் இறைநன்னீராட்டு பெருவிழா நடைபெறவிருக்கிறது.

அதனையொட்டி இன்று(9) வெள்ளிக்கிழமை முழு நாளும் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

செந்தமிழ் ஆகம தலைமை அருட்சுனைஞர் சிவத்திரு தனியொளி சிவம் செல்லத்துரை பிரசாத்( யாழ்ப்பாணம், இணுவில், ஞானலிங்கேச்சர திருக்கோவில் குரு) தலைமையில் இறை நன்னீராட்டுப் பெருவிழா இடம் பெற இருக்கின்றது.

செந்தமிழ் ஆகம உதவி அருட் சுனைஞர்களாக சிவத்திரு சிவகுமரன் சிவலதன், சிவத்திரு தவக்குமார் டிலக்ஷன், சிவத்திரு கணநாதன் சுதாகரன் ஆகியோர் செயலாற்றுவார்கள். இறை நன்னீராட்டு பெருவிழா நிறைவில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :