சாய்ந்தமருதில் முன்னனி கழகமாக திகழும் Blasters SC கழகத்தை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது சாய்ந்தமருது Boom Boom SC விளையாட்டுக் கழகம்.Boom Boom- Media Unit-
Swan Champion Trophy 2022 போட்டியின் முதற் சுற்று கடந்த 22.09.2022 (Thursday@1.30pm) ஆன்று சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது Blaster விளையாட்டு கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 19.5 பந்துவீச்சு ஓவரில் சகல விக்கட்டுக்களையுமிழந்து 149 ஓட்டங்களை பெற்றிருந்தது.

150 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது Boom Boom விளையாட்டுக் கழகம் 19.5 பந்துவீச்சு ஓவரில் 9 விக்கட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்று 1விக்கெட்டால் வெற்றிவாகை சூடிக்கொண்டது.

Boom Boom கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் Mohamed Firthous மற்றும் Mohamed Hasnath Farhan ஆகியோரின் அதிரடி ஆட்டம் பிரகாசித்ததுடன் அடுத்த விக்கட்டுக்காக களமிறங்கிய Ajwath Nazeer நிலைமை அறிந்து நிதானமாக துடுப்பெடுத்தாடி சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இருந்தார்.5,6 விக்கட்டுக்கள் தொடராக விழ 8வது வீரராக களமிறங்கிய Mohamed Sufaik இன் மட்டை பந்துகளை தும்சம் செய்ய BoomBoom கழகத்தின் வெற்றி இலகுவானது.சந்தோசத்தின் வெளிப்பாட்டில் மைதானமே ஆதரவாளர்களால் களைகட்டியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக MJI_Sufaik (Game Changer Award) தெரிவுசெய்யப்பட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :