நாளை 22ஆம் திகதி பி.பகல் 04.மணிக்கு பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக காலிமுகத் திடலில் கையெழுத்து வேட்டை - ஊடக மாநாடுஅஷ்ரப் ஏ சமத்-
ணில் விக்கிரமசிங்க - ராஜபக்ச அரசு இந்த நாட்டில் வாழும் சகல சமூகத்திற்கும் எதிராகவும் அமுல்படுத்தியுள்ள பயங்கரவாதச் சட்டத்திற்கான கையெழுத்து வேட்டை நாளை வியாழக்கிழமை 22ஆம் திகதி பி.பகல் 04.00 மணிக்கு சகல மக்களது பங்கு பற்றுதலுடன் காலிமுகத்திடத்திடலில் உள்ள அரகல பூமிக்கு வந்து கையெழுத்திடுமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

மேற்படி விடயமாக இன்று 21 கொழும்பு நுாலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் தகவல்களை தெரிவித்தனா்

இவ் ஊடக மாநாடு பாராளுமன்ற உறுப்பிணா் எம். ஏ.சுமந்திரன், முஜிபு ரஹ்மான் , உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரநிதிகள் கருத்து தெரிவித்தனா் ஆசிரியா் சங்கம், இலங்கை வங்கி ஊழியா் சங்கம், வைத்தியா்கள் சங்கம், சட்டத்தரணிகள் சங்கம் சுதந்திர ஊடகவியலாளா்கள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவா்கள் சங்கங்களின் பிரநிதிகளும் இணைந்து தத்தமது கருத்துக்களைத் தெறிவித்தனா்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலன பிரதேசங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு கிழக்கு தெற்கு உட்பட இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இதில் இணைந்து கொண்டுள்ளனா்.
இச் சட்டம் கடந்த காலங்களில் தமிழா்களுக்கு மட்டும் என்றும் பின்னா் உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னா் முஸ்லிம்களுககென்றும் அவ்வப்போது ஆட்சியிலிருந்து அரசாங்கள் அமுல்படுத்தி அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் எனக் கைது செய்தும் காணமல் ஆக்கப்பட்டும் வந்தனா்.
கடந்த மே மாதம் பின்னா் ஜலை மாதமளவில் அரகலைத் தாக்குதலின் பின்னா் தெற்கிலும் சிங்கள மக்களுக்குக் எதிராக இச் சட்டத்தினைத் தினித்து அப்பாவிகளை அப்பாவி இளைஞா்களை கை செய்து தடுத்து வைத்துள்ளாா்கள். அதில் குறிப்பாக பல்கலைக்கழக மாணவா்கள் அடங்குகின்றனா் இதனைத் தற்போதைய ரணில் - ராஜபக்ச அரசாங்கம் இச்சட்டத்தினைப் பயன்படுத்தி கடந்த அரகலையில் ஈடுபட்டவா்களது கைத்தொலைபேசியில் இலக்கங்களையும் பரீசீலனை செய்து அப்பாவி இளைஞா்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். இம் மாணவா்கள் தமது உரிமைக்காகவும் நாட்டின் பொருளாதார சீர்கேடுகளுக்காகவும் குரல் கொடுத்து தமது உரிமைககளை வெளிப்படுத்தியவா்களாவா்.

ஆகவே தான் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள்தொ அமைச்யம் தொட்டு உலக நாடுகளிடம் நாங்கள் இப் பிரச்சினையைக் கொண்டு சென்று பயங்கரவாதச் தடைச் சட்டம் இந்த நாட்டிலிருந்து முற்றாக அகற்றப்படல் வேண்டும். சகல உரிமைகளும் சமாமாக இருத்தல் வேண்டும். இந்த நாட்டில சாதாரண மக்களுக்கான தமது பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கான சுதந்திரம் இருந்தல் வேண்டும். அதற்காகவே இலங்கையின் சகல மக்களும் ஒன்றினைந்து யாழ் தொட்டு ஹம்பாந்தோட்டை வரையிலான மக்களை இணைததுக் கொண்டு இவ்கையெழுதது வேட்டை த்திட்டதத்தினை ஆரம்பித்துள்ளோம். என அங்கு தொழிற் சஙகளின் பிரநிதிகள் கருத்து தெரிவித்தாா்கள். நாளை 22 ஆம் திகதி பி.பகல் காலிமுகத்திடலுக்கு வந்து இக் கையெழுதது வேட்டையில் இணைந்து கொள்ளுமாறும் பொதுமக்களை வேண்டிக் கொண்டனா்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :