ஏறாவூரில் சிறுவர்களை மையப்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதற்காக வீட்டுத் தோட்டம் (மரக்கறி உற்பத்தி) நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக UNICEF, CERI நிறுவனங்களின் அனுசரணையுடன் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் நகரசபையின் தவிசாளர் எம்.எஸ்.நழீம் அவர்களின் எண்ணக்கருவில் ஏறாவூர் நகரசபையினால் முன்னெடுக்கப்படும் சிறுவர் நேய நகர அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் ஓர் அங்கமாக நகரசபையில் சிறுவர்களை மையப்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதற்காக வீட்டுத் தோட்டம் (மரக்கறி உற்பத்தி) நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக UNICEF, CERI நிறுவனங்களின் அனுசரணையுடன் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

இன்று ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் எம்.எஸ்.நழீம் அவர்களது தலைமையில் ஏறாவூர் நகரசபை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் MHM ஹமீம், உள்ளூராட்சி உதவியாளர் ஜனாபா சுல்பிகா ஜின்னா, ஏறாவூர் நகரபிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு T பிரபாகரன், ஏறாவூர் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாய போதனாசிரியர் MH முர்ஷிதா ஷிரீன், ஏறாவூர் நகரசபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஜனாபா சாஜிதா பர்வின், இளைஞர் கழக உறுப்பினர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள், ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எனபலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :