சவூதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜித்தாவில் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு மாநாடு (OIC) அமைப்பின் பொருளாதார விவகாரங்களுக்கான பதில் செயலாளரும் பிரதிச் செயலாளருமான அஹ்மட் செங்கெண்டோ அவர்களை ஜித்தாவிலுள்ள OIC தலைமையகத்தில் நேற்று (29) சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் தூதுவர் முசா குலக்லிகாய, நிருவாக மற்றும் நிதிப்பிரிவின் உதவிச் செயலாளர் நாயகம், ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதியின் விசேட தூதுவராக சவூதி அரேபியா சென்றுள்ள அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நடாத்திய இந்த சந்திப்பின் போது சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் முஹமட் அம்சா மற்றும் கொன்சியூலர் ஜெனரல் SMA. பலாஹ் மௌலானாவும் உடனிருந்தார்.
0 comments :
Post a Comment