60 வயதை எட்டும் அரச ஊழியர்கள் அனைவரும் 2022.12.31 ஆம் திகதிக்கு கட்டாய ஓய்வை பெற முன்மொழிவு.-இடைக்கால வரவு செலவு திட்ட வாசிப்பில் ஜனாதிபதி



நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை சற்று முன்ன நிகழ்த்தினார்
இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி தெரிவித்தவை,

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததன் பின்னர் அந்த தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

2022 செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் வட் வரி 12% இருந்து 15% வரை அதிகரிக்கப்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அரச நிறுவனங்களுக்கு எரிபொருள் வாகனங்களை வாங்குவதை நிறுத்திவிட்டு, மின்சார வாகனங்களை வாங்குமாறு யோசனை முன்வைப்பு.

60 வயதை எட்டும் அரச ஊழியர்கள் அனைவரும் 2022.12.31 ஆம் திகதிக்கு கட்டாய ஓய்வை பெற முன்மொழிவு.

மீனவர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்.

சமுர்த்தி உதவியை பெறும் 1.7 மில்லியன் குடும்பங்களுக்கான நிவாரணம் 5,500 ரூபாவில் இருந்து 7,000 ரூபாய் வரை அதிகரிப்பு.

பெரும்போகத்தின் போது உரத்தின் விலை குறைக்கு எதிர்பார்ப்பு.

கர்ப்பிணி பெண்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு.

சமையல் எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய நடவடிக்கை.

60 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரும் ரூபாய் கொடுப்பனவு.

தொழில் இல்லாதவர்களுக்கு 20 ஏக்கர் காணி ஒதுக்கப்படும். அதில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முன்னெடுக்கப்படும். அதற்கான 50 மில்லியன் ஒதுக்கீடு.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :