அஸ்டோ அமைப்பின் ஸ்மாட் ஸ்டுடன்ட் திட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை பிராந்திய பாடசாலை மாணவர்களுக்கு அஸ்டோ அமைப்பினரால் விஷேடமாக திட்டமிட்டிருக்கும் ஸ்மாட் ஸ்டுடன்ட் ( SMART STUDENTS )திட்டம் பற்றி கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு அதிபர் ஏ.எம். பைஸால் தலைமையில் அண்மையில் ( 29 ) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தரம் 11 பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் ஏ.எம். றியாஸ், பாடசாலையின் ஆலோசனை வழிகாட்டல் பொறுப்பாளர் ஜனாபா ஜனூன் நௌஸாத் , ஸ்மாட் ஸ்டுடன்ட் திட்டத்தின் இணைப்பாளர்களான எம்.ஆர்.எம்.ரைய்யான், ஏ.எம்.ஜெசூலி ஆகியோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கல்வி மற்றும் உளவியல் வழிகாட்டல்கள் , தலைமத்துவ பயிற்சி முகாம்கள் ஆளுமை விருத்தியை மையப்படுத்திய செயற்திட்டங்கள் , திறமையாளர்களை ஊடக வெளிச்சத்துக்கு கொண்டுவருதல் , ஆத்மீக வழிகாட்டல் ,முதலுதவி பயிற்சி முகாம்கள் ,மாதந்தோறும் தபாலில் சன்மார்க்க மற்றும் அறிவியல் துணுக்குகள் , பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு பயிற்சி ,தகவல் தொழினுட்ப வழிகாட்டல்கள் , இயற்கை மருத்துவம் சார்ந்த கருத்தரங்குகள் , அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள் ,சிங்கள மற்றும் ஆங்கில மொழி விருத்தி வகுப்புக்கள் , சூம் செயலியில் மாதம் இரு முறை பல்துறை விற்பன்னர்களை கொண்டு கருத்தரங்கு மற்றும் ஆய்வரங்குகள் ,கற்றல் தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் , நூலக சேவை என்பன இத்திட்டத்தினூடாக மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக ஸ்மாட் ஸ்டுடன்ட் திட்டத்தின் இணைப்பாளர் எம்.ஆர்.எம்.ரைய்யான் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :