தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் "இடைநிலை ஆய்வுகள்" துறையின் தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சாஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரினால் இவருக்கான நியமனம் 19.08.2022 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அனர்த்த முகாமைத்துவ துறையில் விசேட பட்டம் பெற்ற வராவார்.
சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தினதும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியினதும் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத் தம்பதிகளின் மூத்த புதல்வராவார்.
0 comments :
Post a Comment