காத்தான்குடி-5, மீராப்பள்ளி வீதியைச் சேர்ந்த 23வயதுடைய அக்பர் அலி பாத்திமா அஸ்பா என்ற மாணவியே இவ் விபத்தில் மரணமானவராவார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட விடுதி மாணவியான இவர் இரண்டாவது பருவகால அமர்வின்பொருட்டு தனது கணவருடன் காத்தான்குடியிலிருந்து இன்று காலை 6.00மணியளவில் புறப்பட்டு நிந்தவூரினூடாக பல்கலைக்கழகத்திற்கு பயணித்துக்கொண்டிருந்தபோதே வாகனமொன்றுடன் மோதுண்டு காலமானார்.
இவரது ஜனாஸா தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை நிர்வாகம் பொலிசாருக்கு இதுதொடர்பாக அறிவித்ததைத் தொடர்ந்து சம்மாந்துறை பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இம்மாணவி திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இப்பரிதாப மரணம் சம்பவித்துள்ளமை கவலைக்குரியதாகும்.
இம்மாணவியின் தந்தையான அக்பர் அலி கல்முனை மின்சார சபையில் நீண்டகாலமாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment