சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் நிர்வாகிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ் மௌலானாவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) இரவு சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைப்புக்கு புதிதாக தவிசாளராக நியமிக்கப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.எம். இஸ்மாயில், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சாதிக் எஸ் முஹம்மட், ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன், பிரதி தலைவர்களாக நியமிக்கப்பட்ட கலைஞர் என்.எம். அலிக்கான் டொப் குயின் நிர்வாக இயக்குனர் எம்.எச்.எம்.அலிரஜாய், பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்ட இனாமுள்ளாஹ் மெளலானா, மகளிர் அணி தலைவியாக நியமிக்கப்பட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் கவிதாயினி சுஹைல் அஸீஸ் ஆகியோருக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஐக்கிய காங்கிரஸ் தலைவர் கலாபூஷணம் முபாறக் அப்துல் மஜீட், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளரும், அமைப்பின் ஊடக பணிப்பாளருமான நூறுள் ஹுதா உமர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நெளபில், ஊடகவியலாளர்களான எம்.எஸ்.எம். ஸாஹிர், எம்.என்.எம். அப்ராஸ், திரைப்பட இயக்குனர் கலைஞர் எல்.எம். சாஜித் உட்பட அமைப்பின் நிர்வாகிகள், உயர் சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment