சம்மாந்துறை பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் மாணவர்களுக்கு கொரிய நிதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்-
கொரிய சர்வதேச கூட்டுறவு முகவர் (கொய்கா- KOICA) திட்டத்தின் நிதியுதவியுடன் Association of KOICA Fellows (AKOFE) யினால் சம்மாந்துறை கல்விவலய பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கு நிகழ்வு சம்மாந்துறை அல்- அஸ்மான் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம்.ஏ.சி. றஸாக் தலைமையில் இன்று (25) இடம்பெற்றது.

சம்மாந்துறை பிராந்திய பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சம்மாந்துறை தாருஸலாம் தேசிய பாடசாலை, சம்மாந்துறை அல்- அஸ்மான் வித்தியாலயம், சது /மல்கம்பிட்டி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் Association of KOICA Fellows (AKOFE) தலைவர் ரொஷான் சேரசிங்க, சிரேஷ்ட உப தலைவர் கவிந்த்ர ஜெயவர்த்தன, செயலாளர் டி. விஜயசிங்க உட்பட நிர்வாக உறுப்பினர்கள், சம்மாந்துறை பிராந்திய பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் யூ.எல். றியால், மல்கம்பிட்டி ஜீ.எம்.எம்.எஸ். பிரதியதிபர் பீ.எம். நினாப், சம்மாந்துறை தாருஸலாம் தேசிய பாடசாலை ஆரம்ப பிரிவு பகுதி தலைவர் எம்.ஐ. அமீர் அலி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :