அட்டாளைச்சேனை பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் AK. காமிலா நெறிப்படுத்தலில் பாடசாலை மாணவர்களுக்கான "போற்றுதலுக்குரிய பிள்ளையாக மாறுவது எப்படி" என்ற விழிப்புணர்வு கருத்தரங்கும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று (23) ஒலுவில் அல் ஹம்றா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் F.நஹீஜா முஸாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்..
ஒலுவில் அல் ஹம்றா தேசிய பாடசாலையின் அதிபர் UKA.றஹீம் அவர்களும்,பிரதி அதிபர், பாடசாலையின்உளவளத்துணை ஆசிரியர் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் S.சியாத், உளவள உத்தியோகத்தர் M.சியாம், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் I.கிசோர் ஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment