சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் நிகழ்வு!ர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு இளைஞர் கழகங்களின் மூலமாக தன்னார்வ வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்பதை கருப்பொருளாக கொண்ட இன்றைய நிகழ்வு

சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு SLYC இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட கடற்கரை சிரமதானமானது 12.08.2022ம் திகதி சாய்ந்தமருது கடற்கரை பூங்காவுக்கு பின்னுள்ள பகுதியிலும் மற்றும் மரம் நடுகை நிகழ்வானது சாய்ந்தமருது சதுக்கத்திலும், அதற்கு அன்மித்த பகுதியிலும், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்திலும்,

SLYC இளைஞர் கழகத்தினுடைய தலைவர் SA. Mohamed Aslam அவர்களின் ஒழுங்குபடுத்துதலில் கழகத்தினுடைய உயர்பீட உறுப்பினர்களின்

ஆதரவுடன் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சேவை அதிகாரி MM. Zameelul Ilahi, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி MTM. Haroon அவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வேலை திட்டத்தில் கழகத்தினுடைய உறுப்பினர்கள் (இளைஞர், யுவதிகள்) ம், மீனவர்களும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக கழகத்தினுடைய ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வேலை திட்டத்தில் கலந்து கொண்ட அனுபவம் வாய்ந்த மீணவர்கள் கழகத்திற்கு நன்றிகளை காணிக்கையாக்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :