கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அச்சுருவாக்கப்பட்ட 4 நூல்கள் கையளிப்பும், அதன் வெளியீட்டு விழாவும் நாளை காலை 10 மணிக்கு திருகோணமலை நகரசபை நூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.முனாஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
அம்மாவுக்கு பிடித்த கனி என்ற சிறுவர் பாடல்கள் நூலாசிரியர் கலாபூசனம் பி.கனகரத்தினம், கொட்டியாரப்பற்று வன்னிபங்கள் வரலாறு என்ற நூல் ஆசிரியர் வைத்திய கலாநிதி த.ஜீவராஜ், நவீன சீதை என்ற சிறுவர் கதை நூலாசிரியர் கவிச்சுடர் (திருமதி) க.சிவரமணி, கடலோரப்பாதை என்ற சிறுவர் கதை நூலாசிரியர் ஏ.எம்.முகைதீன் ஆகியோர்களினால் எழுதப்பட்ட நூல்களே இவ்விழாவில் வெளியீடு செய்யப்பட்டு கையளித்து வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment