தமிந் நாட்டு படத் தயாரிப்பில் இலங்கை சினிமா நட்சத்திர நடிகர் ஹேமல் ரணசிங்க நடித்த தமிழ் பட தயாரிப்பு திருகோணமலை நெல்சன் திரையரங்கில் திரையிட்டு வைப்பு



ஹஸ்பர்-
லங்கை சினிமாவின் மக்கள் நட்சத்திரம் ஹேமல் ரணசிங்க நடிகராக நடித்த தமிழ் திரைப்படமான "செகண்ட் ஷோ" எனும் திரைப்படமானது திருகோணமலை நெல்சன் திரையரங்கில் (08) திரையிடப்பட்டது.

இத் திரைப்படமானது தமிழ் நாட்டிலுள்ள உள்ள டார்க் ரூம் நிறுவன திரைப்பட தயாரிப்பில் வெளியான இதனை பிரதான தயாரிப்பாளரான கனேஷ் மகாதேவன் தயாரித்துள்ளார் . இலங்கையில் இணை தயாரிப்பாளராக கௌசல்யா விக்ரமசிங்கவும் செயற்பட்டுள்ளார் . குறித்த திரைப்பட தயாரிப்பின் தமிழ் நாட்டினை சேர்ந்தவரும் பணிப்பாளருமான ஏ.டி.ஞானம், ஒலி வடிவமைப்பு டாக்டர் அம்பி சுப்ரமணியம், பாடல் பரனிவேல் ஆகியோர்களும் இதில் பங்களிப்புச் செய்துள்ளனர்.

இலங்கை நடிகர் ஹேமல் ரணசிங்க மற்றும் தமிழ் நாட்டினை சேர்ந்த நடிகை மற்றும் சிலரை கதாபாத்திரங்களாக கொண்டு இலண்டனில் காட்சி படத் தயாரிப்பு அனைத்தும் ஒளி வடிவமாக பெறப்பட்டு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கான ஒரு விழிப்புணர்வு திரைப் படமாக இது எடுத்துக்காட்டுகிறது. பெண்கள் என்பது பாலியலுக்காக மாத்திரமன்றி மற்றும் போதை பழக்கமே ஒரு ஆணை பெண்ணின் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு தூண்டுகிறது என பல விழிப்புணர்வுகளை சமூக மட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து பல கதாபாத்திரங்களுடன் இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் திருகோணமலையை சேர்ந்த சகோதர மொழி இளைஞர் யுவதிகள்,தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு இத் திரைப்படத்தை கண்டு கழித்ததுடன் திரைப்பட கதாநாயகன் இலங்கை நடிகர் ஹேமல் ரணசிங்க, டாக் ரூம் படத் தயாரிப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கௌசல்யா விக்ரமசிங்க, சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :