மியன்டாட் இளையோர் அணிக்கு புதிய சீருடை அறிமுகம்
எம்.என்.எம்.அப்ராஸ்-
சாயந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழகத்தின் இளையோர் அணி வீரா்களுக்காக புதிய சீருடை அறிமுகம் அண்மையில் இடம்பெற்றது

நிந்தவூர் -அட்டப்பளம் றினோஸ் றைஸ் மில் வளாகத்தில் கடந்த(13) சனிக்கழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல் போசன விருந்துபசாரத்தின் போது கல்முனை பிராந்தியத்தில் காணப்படுகின்ற கழகங்களுக்கு முன்னுதாரனமாக திகழும் மியன்டாட் விளையாட்டுக்கழகத்தினால் பிரதாந்தியத்தில் எக்கழகமும் இதுவரை செய்திடாத முறையில் முதல் முதலாக இளையோர் அணி வீரா்களுக்காக பாஹிம் அலுமினியம் கிளாஸ் சென்டரின் (Fahim Aluminium Class Center )பிரதான அனுசரணையுடன் மற்றும் கல்முனை பசால் ஸ்டோர்ஸ் (Fazal Stores Kalmunai)கல்முனை ஹிசாம் டிரேடிங் (Hisaam Trading Kalmunai),கே.எல்.எம்.பர்சாத் ஆகியோரின் இனைஅனுசரனையில் இளையோர் அணி வீரா்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் கழகத்தின் தலைவர் ஏ.பாயிஸ், கழகத்தின் தவிசாளர் எம்.ஜே.எம்.காலித் முகாமைத்துவ உறுப்பினர் பொரியியலாளர் எம்.எல்.நவாஸ்,
முகாமைத்துவ உறுப்பினர் ஆர்.எம்.ரினோஸ் முகாமைத்துவ உறுப்பினர் ஏ.எல்.ஏ.நாஸர், செயலாளர் யூ.கே.ஜவாஹார், பிரதித்தலைவர் யூ.எல்.எம்.பாஹிம், ஆலோசனை சபைத்தலைவர் எஸ்.எம்.அமீர், ஆலோசனை சபை உறுப்பினர்களான எம்.ஏ.ஜனூஸர், எஸ்.எம்.உஸ்மான், உயர்பீட உறுப்பினர்களான எம்.டி.பிர்தௌஸ், ஏ.எம்.ஜஹான், ஏ. நியாஸ், ஏ. ஆர்.எம். பஸ்மீர், ஏ.எல்.எம்.நியாஸ், ஏ.பி.எம். பைஸால், எஸ்.எல்.நிஸார், முகாமையாளர் யூ.எல்.பரீட் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :