அரச பணியாளர்களை வாராந்தம் 5 நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது



ரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை காலாவதியானதன் பின்னர் அரச பணியாளர்களை வாராந்தம் 5 நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி குறித்த சுற்றறிக்கை காலாவதியாகவுள்ளது. இதன்படி, குறித்த சுற்றறிக்கை காலாவதியாகுவதற்கு முன்னர் அரச பணியாளர்களை சேவைக்கு அழைக்கும் முறைமை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அந்த அமைச்சின் செலயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்னே தெரிவித்தார்.

பணிக்கும் செல்லும் அரச பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி, ஒரு மாதத்துக்குசெல்லுபடியாகும் வகையில் அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதற்கு முன்னரும் எரிபொருள் பிரச்சினையை கருத்திற் கொண்டு பல சந்தர்ப்பங்களில் அரச பணியாளர்களை பணிக்கு அழைக்கும் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது தெரிந்ததே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :