சேதனப் பசளை தயாரிக்கும் விவசாய உபகரணங்கள் கையளிப்புஹஸ்பர்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சேதனப் பசளை தயாரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (06) இடம் பெற்றது.

பெரண்டினா நிறுவனம் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை உரிய பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

விவசாயத்தை உக்குவிக்கும் முகமாக சேதன பசளை உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கும் அவர்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாகவும், உக்கும் பொருள்களை அரைக்கும் இயந்திரம், பொதி செய்வதற்கான சிறிய இயந்திரப் பொதிகள் அடங்களாக மூன்று லட்சம் பெறுமதியான திட்டத்திற்குள் உள்வாங்கி அவர்களுக்கு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இச் சேதனப் பசளை ஊடாக விரைவான பயனை பெறவும் இதற்காக சிறந்த வளமாக இந்த பிரதேசத்தில் நாம் உங்களை கருதுகிறோம் இதற்கான போதுமான பயிற்சியை விவசாய போதனாசிரியர் தொடர்ந்தும் வழங்குவார்கள் இச் சேதனப் பசளை ஊடான உற்பத்தி மூலமாக ஏனைய பிரதேசங்களான விவசாய செய்கையில் ஈடுபடும் பத்தினிபுரம் பாலம் போட்டாறு பகுதி உள்ளூர் செய்கையாளர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் உணவு உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ள இந்த நேரத்தில் இவ்வாறான உதவிகள் ஊடாக உற்பத்தி முறைக்கு பாரிய பங்களிக்கும் திட்டமாக இது இருப்பதாகவும் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி இதன் போது தெரிவித்தார்.

விவசாய துறையானது சேதனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதை முனைப்பாகக் கொண்டு செயற்படும் நிலையில் நல்ல தரமான சேதனப் பசளை உற்பத்திக்கு பாரிய பங்களிக்கும் முகமாகவும் கிராம மட்ட உணவு உற்பத்தி துறையை அதிகரிக்கவும் இது திறம்பட காணப்படுகிறது இதில் திருகோணமலை வவுனியா கிளிநொச்சி உட்பட 11 மாவட்டங்களில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :