ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசனின் பாடசாலைகள் தோறும் சுகாதாரக் கல்வியை வழங்கும் செயற்திட்டம்
ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசனின் பாடசாலைகள் தோறும் சுகாதாரக் கல்வியை வழங்கும் செயற்திட்டத்தின் அறிமுகமும், கலந்துரையாடல் நிகழ்வும் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.ரிபாஸ் , ஆய்விற்கும் அபிவிருத்திக்குமான பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.வீ.ஏ.வாஜீத், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பிரதி பணிப்பாளர் திருமதி ஜிஹானா ஆலீஃப், ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசனின் செயலாளர் மிப்ராஸ் மன்சூர் மற்றும் சுகாதார பணிமனையின் ஊடகப்பிரிவுப் பொறுப்பாளர் பாசித் முகைதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் மிக விரைவில் இச்செயற்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

0 comments :
Post a Comment