திருகோணமலையில் சமைத்த உணவு வழங்கி வைப்புஹஸ்பர்-

திருகோணமலை பகுதியில் உள்ள வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான சமைத்த ஒரு நேர மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது
குறித்த உணவுகளை vebinan Guys for life கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (03) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோணேசபுரி, மனையாவெளி போன்ற கிராமங்களை சேர்ந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்டன. இதில் சுமார் 380 உணவு பொதிகளை வழங்கினர். ஒரு மாதத்துக்கு இரு தடவையாவது இவ்வாறான மதிய உணவினை சமைத்து வழங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கழகத்தினர் தெரிவித்தனர். இவ்வாறானவற்றுக்கு ஏனையோரும் உதவ விரும்பினால் அரிசி மரக்கறி வகைகளை வழங்கியும் உதவலாம் என தனவந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக சமூகத்துக்காக இவ்வாறான சேவைகள் இடம் பெறுவதாகவும் ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் இணைந்தும் இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :