ஆட்டோ ஓட்டுண‌ர்க‌ளின் வாழ்வாதார‌ம் மிக‌ மோச‌மான‌ நிலையில்!-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்



பெட்ரோல் இல்லாமை கார‌ண‌மாக‌ கொழும்பு, க‌ல்முனை, அக்க‌ரைப்ப‌ற்று போன்ற‌ மாந‌க‌ர‌ ச‌பைக‌ளுக்குள் உள்ள‌ ஆட்டோ ஓட்டுண‌ர்க‌ளின் வாழ்வாதார‌ம் மிக‌ மோச‌மான‌ நிலையில் உள்ள‌து.

ஒவ்வொரு நாளும் ஆட்டோ ஓடி ச‌ம்பாதித்தோர் இப்போது ஆட்டோவை வெளியே எடுக்க‌ கூட‌ எரி பொருள் இன்றி த‌விக்கிறார்க‌ள். இந்த‌ நிலையில் அவ‌ர்க‌ளின் குடும்ப‌ங்க‌ள் வெளியில் சொல்ல‌முடியாத‌ க‌ஷ்ட‌த்தில் இருப்பார்க‌ள்.
இம்ம‌க்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌த்தில் ஓட்டுப்போட்ட‌ எம் பிமார், மாந‌க‌ர‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ ஆட்டோக்கார‌ர்க‌ளின் நிலை ப‌ற்றி அறிய‌ வேண்டும்.

சில‌ முன்னாள் இன்னாள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளிக்கு பெட்ரோல் நிலைய‌ங்க‌ளும் கோடிக்க‌ன‌க்கான‌ சொத்துக்க‌ளும் உள்ள‌ன‌. அவ‌ர்க‌ளின் க‌ட்சித் த‌லைவ‌ர்க‌ளுக்கு ல‌ண்ட‌னில் வீடுக‌ள் உள்ள‌ன‌. ஆனாலும் இந்த‌ ஏழை ஆட்டோக்கார‌ர்க‌ளுக்கு இவ‌ர்க‌ள் உத‌வி செய்த‌தாக‌ காண‌வில்லை.

குறைந்த‌து இந்த‌ ஆட்டோக்கார‌ர்க்ளுக்கு பெட்ரோல் கிடைப்ப‌த‌ற்குரிய‌ ஏற்பாட்டை த‌ம‌து அர‌சிய‌ல் அதிகார‌ம் மூல‌ம் செய்ய‌ வேண்டும். அல்ல‌து ம‌க்க‌ள் பிர‌திநிதித்துவ‌ம் மூல‌ம் தாம் ச‌ம்பாதித்த‌தில் இருந்து இம்ம‌க்க‌ளுக்கு மாணிய‌ம் வ‌ழ‌ங்க‌ முன் வ‌ர‌ வேண்டும். அப்ப‌டியும் முடியாது போனால் த‌ம் பிர‌தேச‌த்தில் உள்ள‌ செல்வ‌ந்த‌ர்க‌ளை அழைத்து அவ‌ர்க‌ளின் உத‌விக‌ளை ப‌கிர‌ங்க‌மாக‌ பெற்று அவ‌ற்றை இவ‌ர்க‌ளுக்கு ஊழ‌ல் இன்றி ப‌கிர‌ங்க‌மாக‌ வ‌ழ‌ங்க‌ முன் வ‌ர‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி, (உல‌மா க‌ட்சி) கேட்டுக்கொள்கிற‌து.

முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :