சமூக தொண்டாற்றிய மூத்த வைத்தியர் எம்.ஐ.எம். ஜெமீலுக்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலினால் சேவைநலன் பாராட்டு நிகழ்வு !


நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது பிரதேச மருத்துவம், பெண்கல்வி மேம்பாடு, சமூக சேவை வேலைத்திட்டங்களில் மும்முரமாக பணியாற்றிவந்த சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜூம்மாப்பெரியபள்ளிவாசல் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீலின் சேவைநலன் பாராட்டு நிகழ்வு சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜூம்மாப் பெரிய பள்ளி வாசலின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துள் கரீம் தலைமையில் சாய்ந்தமருதில் இன்று (13) இடம்பெற்றது.

1966 ஆம் ஆண்டு முதல் கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற வைத்தியராக அறியப்பட்ட டாக்டர் எம்.ஐ. எம். ஜெமீல் பெண்பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டு வேலைத் திட்டங்களில் மும்முரமாக செயற்பட்டவர். சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜூம்மாப்பெரியபள்ளிவாசல் தலைவராக 07 ஆண்டுகளாக பணியாற்றி ஸக்காத் நிதியத்தை நிறுவியதுடன் பள்ளிவாசலுக்கான நிர்வாக கட்டிடத்தையும் பெற முனைப்புடன் செயற்பட்டவர். கடந்த சுனாமி காலத்தில் வெகுவாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது கிராமத்தை கட்டியெழுப்ப ஜூம்மாப் பெரிய பள்ளி வாசல் தலைவராக அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தார். இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் பல்கலைக்கழக வேந்தராக இருந்தவரும், கிழக்கின் முதல் முஸ்லிம் பட்டதாரியாகவும் வெளியேறிய தேசபந்து ஜெஸிமா இஸ்மாயிலுடன் இணைந்து நிறைய கல்விச்செயற்றிய இவரின் சேவைகளை ஜூம்மாப் பெரியபள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துள் கரீம், மௌலவி எம்.எஸ்.எம். நுஹ்மான் ஆகியோர் நினைவுபடுத்தி இங்கு உரையாற்றினர்.

இங்கு கருத்து தெரிவித்த டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல், பள்ளிவாசல் நிர்வாகிகள் எல்லோரும் கலந்துகொண்டு என்னை கௌரவித்தமையை மகிழ்ச்சியுடன் நோக்குகிறேன். நல்லவர்களை ஒரு சமூகம் பாராட்டாமல் விட்டால் நல்லவர்கள் உருவாகாமலே சென்றுவிடுவார்கள் எனும் கூற்றுக்கு அமைய சாதனையாளர்கள், கௌரவிக்க தகுதியானவர்களை நாம் உரிய நேரத்தில் கௌரவிக்க வேண்டும். எனது சமூக சேவை காலங்களில் நிறைய விடயங்களை இந்த சமூகத்திற்க்காக செய்திருக்கிறேன். அவைகளை நினைத்து பார்க்க இது நல்ல சந்தர்ப்பமாக பார்க்கிறேன் என்றார்.

நீடித்த ஆயுளுக்கும், நிம்மதியான வாழ்வுக்குமான துஆ பிரார்த்தனையை மௌலவி அஸ்ஸெக் எம்.எஸ்.எம். நுஹ்மான் நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஐ.எம். மன்சூர், பொருளாளர் ஏ.ஏ. சலீம் உட்பட மரைக்காயர் சபையினர், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :