நீண்ட கால கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்க கட்டார் இணக்கம்?அஷ்ரப் அலீ-
லங்கையின் மிகப் பெரும் நெருக்கடியான எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வாக நீண்ட கால கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்க கட்டார் இணக்கம் தெரிவித்துள்ளது.
கட்டார் நாடு வழங்கும் எரிபொருளுக்கான கட்டணம் பத்து வருடங்களின் பின்னர் திருப்பிச் செலுத்தப்படும் வகையில் அதாவது 2022ல் வழங்கும் எரிபொருளுக்கான கட்டணத்தை 2032ம் ஆண்டில் இருந்து வட்டியில்லா இலகு தவணைகளில் செலுத்தும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவும் கட்டார் நாடு இணக்கம் தெரிவித்துள்ளது
அதே நேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கட்டார் நாட்டின் பெயர் அநியாயமான முறையில் களங்கப்படுத்தப்பட்டமை குறித்து அந்நாட்டு முக்கியஸ்தர்கள் கடுமையான விசனம் தெரிவித்துள்ளனர். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் நியாயமான விசாரணையொன்றுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
(ஆனால் அவ்வாறான விசாரணை நடைபெறும் பட்சத்தில் சரத் வீரசேகர, கருணா அம்மான், பிள்ளையான் உள்பட ஏராளம் அரசியல்வாதிகள் சிக்கலில் மாட்ட வரும் என்பதால் அரசாங்கம் இது தொடர்பில் இன்னும் வாக்குறுதி அளிக்கவில்லை. அரசாங்கத்தின் தயக்கம் கடைசியில் கட்டாரின் பேருதவி கிட்டாமல் போகும் நிலையை ஏற்படுத்தலாம்)
அடுத்ததாக கடந்த காலங்களில் கட்டார் அரசாங்கம் நன்கொடையாக இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கிய நிதியுதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் குறித்த விபரங்களை தமக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளது
கடந்த காலங்களில் கட்டார் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான கோடி ரூபா நன்கொடைகளை உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை முன்னிலைப்படுத்தி அரசியல்குடும்பம் ஒன்று சுருட்டிக் கொண்டுள்ள நிலையில் குறித்த நிதி விடுவிக்கப்பட வேண்டும் அல்லது அதற்கான செயற்திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. (மட்டக்களப்பு உன்னிச்சைக்குள அபிவிருத்தி, இரணைமடு அபிவிருத்தி, ஹெடஓயா அபிவிருத்தி போன்ற செயற்திட்டங்கள் முக்கியமானவை. அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, புத்தளம் மருத்துவமனைகளின் மகளிர் வார்டுகளின் மேம்பாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த நன்கொடைகள் சன்ன ஜயசுமண மற்றும் ராஜபக்‌ஷ கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியிருந்தது. அத்துடன் கிழக்கின் குடிநீர்ப்பிரச்சினைக்கு வழங்கப்பட்ட நிதியும் மாயமாக மறைந்துவிட்டது)
எனவே குறித்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவேற்றினால் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் சாயம் வெளுத்துவிடும் என்பதன் காரணமாக நிபந்தனைகளை தளர்த்துமாறு அரசாங்கம் தற்போதைக்கு ராஜதந்திர ரீதியிலான கெஞ்சும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது.
மற்றபடி கோட்டாபய பதவி விலக வேண்டும் என்று நேரடியாக கட்டார் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் கட்டார் ஒருபோதும் நேரடியாக தலையிடுவதில்லை. ராஜதந்திர ரீதியில் அவ்வாறான தலையீடுகள் இன்னொரு நாட்டின் இறையாண்மையை மீறும் செயற்பாடுகளாகும். கட்டார் அப்படியான முட்டாள்தனமான செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபடாது.
அதே ​நேரம் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் பயங்கரவாத சதித்திட்டங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பாக பகிரங்கப்படுத்தும் வகையில் கட்டார் முன்வைத்துள்ள நிபந்தனைகள் தான் தற்போது அரசாங்கத்தின் கழுத்தை இறுக்கிப் பிடித்துள்ளது
இதில் இருந்து விடுபட அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் உலமாக்களைக் கொண்டு கட்டார் தூதரகத்துடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
எரிபொருள் வழங்கல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை காலை வௌியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :