வெலிகம அஸ்ஸபா மகா வித்தியாலத்தின் இரண்டுமாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டிடங்களை இலங்கைக்கான குவைத் நாட்டின் துாதுவா் ஹலாப் எம்.எம். பூ.தாஹிர் திறந்து வைத்தார்.அஷ்ரப் ஏ சமத்-
குவைத் நாட்டின் நன்கொடையாளா்களின் நிதியைக் கொண்டு நாட்டின் நாலா பாகத்திலிருந்திருத்தும் உள்ள பௌதீக வளங்கள் குறைந்த பாடசாலைகளைத் தெரிவு செய்து அங்குள்ள மாணவா்களது கல்வி மேம்பாட்டுக்கு குவைத் துாதுவரும் இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் அல் ஹிமா இஸ்லாமிய நிறுவனமும் பாரிய கல்வி அபிவிருத்திகளை இலங்கையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

வெலிகம அஸ்ஸபா மகா வித்தியாலத்தின் இரண்டுமாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டிடங்கள் நேற்று வியாழக்கிழமை 30 ஆம் திகதி இலங்கைக்கான குவைத் நாட்டின் துாதுவா் ஹலாப் எம்.எம். பூ.தாஹிர் பிரதம அதிதியாக்க் கலந்து கொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தாா் . இந் நிகழ்வுகள் பாடசாலையின் அதிபா் எம்.எஸ்.எம். ஹிப்ளர் தலைமையில் நடைபெற்றது.
அத்துடன் தென்மாகாணத்தின் கல்வி, மற்றும் காணி அமைச்சின் செயலாளர் ரன்ஜித் யாபா, குவைத்திட்டததின் அல்ஹிமா நிறுவனத்தின் செயலாளா் அஷ் ஷேக் எம்.ஏ.எம். நுாறுள்ளாஹ் (நளிமி) தென்மாகன கல்வி பிரதிப் கல்விப் பணிப்பாளா்.எம்.டீ.எம். ஆகில், உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவா்கள் சங்கம் உட்்பட பெருந்தொகையான மாணவா்கள் பெற்றோா்கள் ஆசிரியா்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனா்.

இங்கு உரையாற்றிய குவைத்நாட்டுக்கான இலங்கைத் துாதுவா் கூறியதாவது-

இலங்கை ஒர் அழகான நாடு நான் உலகில் மிகவும் விரும்பும் நாடு எனது துாதுவா் கடமையிலிருந்து இங்கு 6வது வருடங்களாகவே இலங்கையில் தங்கி துாதுவா் பதவியில் பணியாற்றி வருகின்றேன். குவைத் நாடு இலங்கையுடன் 1966ஆம் ஆண்டு தொட்டு நட்பூரவைப் பேனி வருகின்றது. எமது நாட்டின் நன்கொடையாளா்களது நிதியைக் கொண்டு 25க்கும் மேற்பட்ட பின்தங்கிய பாடசாலைகளது பௌதீக வளத்திற்கு குவைத் உதவி வருகின்றது. அத்துடன் இலங்கையில் ஏற்பட்ட கொவிட் தொற்று, சுனாமி இயற்கை அனா்த்தங்கள் போன்ற காலங்களில் நாம் இலங்கைக்கு பெரிதும் உதவியுள்ளோம். குவைத் குறிப்பாக கல்வி, மருத்துவம், உயா் கல்வி, வீடமைப்பு எனப் பல்வேறு துறைகளில் அவ்வப்போது குவைத் உதவி வருகின்றது.

இலங்கை நாட்டிலிருந்து வைத்தியம், ஆசிரியா்,, பொறியியலாளா் சாதாரன தொழிலாளா்கள் என ஓர் இலட்சத்திற்கும் அதிகமானோா்கள் குவைத்தில் பணியாற்றி வருகின்றனா்.
இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைக்கு .இலங்கை மட்டுமல்ல உலகில் வேறு பல நாடுகளும் பாதிப்படைந்துள்ளது கடந்த இரண்டுவருடங்களான கொவிட் தொற்று மற்றும் அதன் முன்னா் சுனாமி, அனா்த்தம் தற்பொழுது உக்ரைன் ரசியாநாடுகளிடையே யுத்தம். இதனால் நாட்டின் பல்வேறு நாடுகளும் பாதிப்படைந்துள்ளன. இலங்கை பொருளாதாரப் பிரச்சினைக்காக நாம் நீண்ட காலத் திட்டமொன்றை நாம் தயாா்படுத்தல் வேண்டும். குவைத் ஒருபோதும் அரசியல் ரீதியாக உதவுவதில்லை. மனிதபிமான அடிப்படையில் உதவி வருகின்றோம். இலங்கையில் தற்பொழுது நிலவுகின்ற பெற்றோல் , கேஸ் பற்றிய பிரச்சினைகளுக்கு இரு நாடுகளது தலைவா்கள் மட்டத்தில் இருந்து பேசி அதற்கான பேச்சுவாா்த்தைகளை நடாத்தல் வேண்டும். அதற்கு ராஜ்ய தந்திர மட்டத்திலேயே தான் தீா்வு காணப்படல் வேண்டும். அதற்காக குறுகிய காலத்துக்குள் நானோ இங்குள்ளவா்களோ பேசி ஒன்றும் நடைபெறாது எனது நாட்டுத் தலைவா்களும் உங்களது நாட்டுத் தலைகளும் நீண்ட கால அடிப்படையில் பேசித் தீர்மாணம் எடுக்கலாம். என குவைத் துாதுவா் அங்கு தெரவித்தாா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :