பொலிசாரின் அடக்குமுறைக்கு எதிராக பேருவளையில் ஆர்ப்பாட்டம்!




J.f.காமிலா பேகம்-
இன்று (1) பேருவளை IOC பெற்றோல் நிலையத்துக்கு முன்பாக, பொதுமக்களால் ஆர்ப்பபாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.கடந்த 27/06/2022 ம் திகதி எரிபொருளுக்காக இப்பெற்றோல் நிலையத்தில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருளை வழங்காது, டோக்கன் கொடுத்து காத்திருக்க விட்டு, புதிதாக வந்தவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.இதனால் போலிசாருக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்பட்டு , பலர் விரட்டியடிக்கப்பபட்டனர்.அத்துடன் பொலிசாரின் அடிதடியில் காயமடைந்த பிரபல மாணிக்க கற் வியாபாரியான மின்ஷாத் முபாரக் என்பவர், நடக்கமுடியாத நிலையில் களுத்துதுறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு நீதி கோரி இன்று பேருருவளை மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இது சம்பந்தமான காணொளி,படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :