போராட்டக்காரர்கள் "கோ-ஹோம்-ரணில்" போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும்நூருல் ஹுதா உமர்-
பாராளுமன்றம், புது ஆரம்பத்துக்காக 24மணி நேரம் ஒத்தி வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சி தலைவர்களுடனான விசேட சந்திப்பில் எமக்கு கூறினார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் பாராளுமன்றம் 24 மணித்தியாலம் ஒத்தி வைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்படுவதன் மூலம் தனது அரசாங்கத்தின் கொள்கை உரையை ஆற்ற ஜனாதிபதி விரும்புவதாக நினைக்கிறேன். போராட்டக்காரர்கள் தமது "கோ-ஹோம்-ரணில்" போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும் என்றும், தமது நல்லாட்சி காலகட்ட அசல் 19ம் திருத்த ஆவணம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அரசியலமைப்புக்குள் கொண்டு வர விரும்புவதாகவும் ஜனாதிபதி எமக்கு தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தையும், பாராளுமன்றத்தையும், எம்பி க்களை கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் கூறினார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :