அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் சுற்றுமதில் திறப்பும் உபகரணங்கள் கையளிப்பும்ஹஸ்பர்-
ந்தையை இழந்த பிள்ளைகள் கற்றுவரும் மூதூர் அத்பால் கல்வி நிலையத்துக்கான சுற்று மதில் திறப்பும் உபகரணங்கள் கையளிப்பும் வியாழக்கிழமை இன்று (21) நடைபெற்றது.

இக் கல்வி நிலையத்துக்கு அல் ஹித்மத்துல் உம்மா பௌண்டேசனின் ஏற்பாட்டினால் 300 அடி சுற்று மதில் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் இக்கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான 30 டம்ரோ அலுமாரிகள் 30 கட்டில்கள் 30 மெத்தைகள் வழங்கப்பட்டன.

மேலும் மின் துண்டிக்கப்படும்போது கற்றல் நடவடிக்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஜெனரேட்டர் ஒன்றும் வழங்கப்பட்டது.

அதேநேரம், டீ பிரசர் பிரிட்ஜ்,கற்றலுக்குத் தேவையான கதிரைகள்,மேசைகள் போன்றனவும் வழங்கப்பட்டு கல்வி நிலையம் புனரமைப்பும் செய்து கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் துருக்கி நாட்டு தொண்டு நிறுவனமான IHHNL நிறுவனத் தூதுவர் முஸ்தபா குரு,அவரின் பாரியார் கயா, அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மது பாத்திஹ், மூதூர் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோருடன் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :