அடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதி!



ரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஜூலை 16 ஆம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற விவகாரங்களை விரைவில் நடத்துவதே எனது நோக்கம். இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

இந்தக் காலப்பகுதியில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு சபாநாயகர் சகல அரசியல் கட்சிகளிடமும் பாராளுமன்றத்திடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :