நேற்று 50 ஆவது நாளில் யாழ் யாத்திரீகர்கள் உகந்தையில் ..



காரைதீவ சகா-
யாழ் கதிர்காம பாதயாத்திரை அடியார்கள் நேற்று (20) புதன்கிழமை கிழக்கின் தென் கோடியில் உள்ள உகந்தை மலை முருகன் ஆலயத்தை சென்றடைந்தார்கள்.
கடந்த மாதம் நான்காம் தேதி யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவினர் நேற்றுடன் 50 நாளை பூர்த்தி செய்தார்கள் .
கடந்த 50 நாட்களாக நடந்து வந்த இந்த பாதையாத்திரை அடியார்கள் நேற்று உகந்தை மலை முருகன் ஆலயத்தில் தரிசித்தார்கள்.
அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்து நாளை 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காட்டுப்பாதை திறந்ததும் காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றார்கள்.

பாதயாத்திரை குழு
தலைவர் சி. ஜெயராசா தெரிவிக்கையில் கடந்த 50 நாட்களாக யாழ்ப்பாணத்தில் இருந்து நாங்கள் நடந்து வந்த போது எமக்கு உதவி செய்த ஒத்துழைத்த அனைத்து ஆலயங்களுக்கும் சமூக சேவையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.132 பேர் எமது குழுவில் இடம் பெறுகின்றார்கள்.
வெள்ளியன்று (22)காட்டு பாதைக்குள் பிரவேசிக்கும் நாம் முருகன் அருளால் ஐந்து தினங்களில் கருகாமத்தை அடைந்து 29 ஆம் தேதி கொடியேற்ற திருவிழாவிலே கலந்து கொண்டு வீடு திரும்ப இருக்கின்றோம் அனைவருக்கும் நன்றிகள். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :