சுத்தமானதும் பசுமையானதுமான நகரை நோக்கி



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் #MS_நழீம் அவர்களின் "சுத்தமானதும் பசுமையானதுமான நகரை நோக்கி" எனும் எண்ணக்கருவில் வட்டார ரீதியிலான பாரிய சிரமதானம் 2022-06-18ஆம் திகதி இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு ஓட்டுப்பள்ளி வட்டாரத்தில் ஏறாவூர் நகரசபை கௌரவ தவிசாளர் #MS_நழீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இச்சிரமதான நிகழ்வின் தொடராக 2022-06-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாளை காலை 6 மணிக்கு அறபாவட்டாரத்தில் இடம் பெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலான இக்கால கட்டத்தில் அரச உத்தியோகத்தர்களை வேலைக்கு அழைக்கும் சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தாலும் ஏறாவூர் நகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அத்தகைய சலுகைகளையும் புறம்தள்ளி எமது பகுதி மக்களின் நலனுக்காக இச்சிரமதான பணியில் கலந்து கொண்டு எமது பகுதியை சுத்தப்படுத்த தயாராகவுள்ளனர்.

ஆகவே அறபா வட்டார பொதுமக்கள் இன்ஷா அல்லாஹ் நாளை தங்களது வீடு, சுற்றுப்புற சூழலையும் சுத்தம் செய்து கழிவுகளை எமது திண்மக்கழிவு வாகனத்தில் ஒப்படைக்குமாறும், சகல சமூகமட்ட அமைப்புக்களும் பொது மக்களும் இச்சிரமதான பணிகளில் கலந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
அத்தோடு கௌரவ தவிசாளர் அவர்களின் சொந்த லோடர் வாகனமும் இச்சிரமதான பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :