மின் கட்டணம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவே! பரிந்துரையை மீள் ப‌ரிசீல‌னை செய்!!



மின் கட்டணம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையை மீள் ப‌ரிசீல‌னை செய்து ம‌க்க‌ள் மீதான‌ சுமையை குறைக்க‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி ஊட‌க‌ங்க‌ளுக்கு தெரிவித்த‌தாவ‌து,

நாட்டில் கேஸ் த‌ட்டுப்பாடு கார‌ண‌மாக‌ ம‌க்க‌ள் மின்சார‌ அடுப்புக்க‌ளையே ந‌ம்பியிருக்கும் நிலையில் மின்சார‌ க‌ட்ட‌ண‌த்தை மும்ம‌ட‌ங்காக‌ உய‌ர்த்துவ‌து ம‌ர‌த்தால் விழுந்த‌வ‌னை மாடு மிதிப்ப‌து போன்ற‌தாகும்.

வீடுகளுக்காக தற்போது காணப்படுகின்ற 1 முதல் 30 அலகுகளுக்கான நிலையான மின் கட்டணத்தை 30 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை அதிகரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதான‌து மிக‌ப்பெரிய‌ அநியாய‌மாகும்.
இவ்வாறு பாரிய‌ அதிக‌ரிப்பை ஏற்ப‌டுத்துவ‌து நாட்டு ம‌க்க‌ளின் அவ‌ஸ்தைக‌ளை புரிந்து கொள்ளாத‌ ம‌னிதாபிமான‌ம‌ற்ற‌ முய‌ற்சியாகும்.

ஆக‌வே மின்சார‌ க‌ட்ட‌ண‌த்தை உய‌ர்த்துவ‌தை மீள் ப‌ரிசீல‌னை செய்து ஏழைக‌ளும் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌மும் பாதிக்க‌ப்ப‌டாத‌ வ‌கையில் செய்ற்ப‌டும்ப‌டி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :