வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாளின் வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் எட்டாம் சடங்கு நிகழ்வு நேற்று(21) மாலை இடம்பெற்றது .
சுமார் 1000 பொங்கல் பானைகளில் அம்மன் அடியார்கள் பகல் 2 மணியில் இருந்து பொங்கல் பொங்கி படைத்தார்கள் .
இரவு 8 மணியளவில் அம்மனுக்கு 12 அடி நீள பலகை தட்டில் அனைத்து அடியார்களது பொங்கல் படைக்கப்பட்டு விசேட பூஜை நடைபெற்றது.
ஆலய கப்புகன்மாரான மயில்வாகனம் யோகநாதன், சங்கரப்பிள்ளை நித்தியானந்தன் ஆகியோர் பூஜை நடத்தினார்கள் .
ஆலய தர்மகர்த்தாக்களான இராசையா குணசிங்கம், பரமலிங்கம் இராசமோகன் ஆகியோர் வழி நடத்தினார்கள்.
ஆயிரக்கணக்கான அம்மன் அடியார்கள் இந்த பூஜையின் போது கலந்து கொண்டார்கள்.
கடந்த மூன்று வருடங்களில் பின்பு இந்த பொங்கல் சடங்கு இடம்பெற்ற காரணத்தினால் நிறைய அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment