வீதி போக்குவரத்து சீர்கேடு-தினமும் எரிபொருளை நாடும் பொதுமக்களால் பாதிப்பு(drone video)



பாறுக் ஷிஹான்-
ரிபொருள் விலையேற்ற தகவல் மற்றும் பற்றாக்குறை காரணமாக அதிகளவான மக்கள் ஒரே நேரத்தில் கொள்வனவிற்காக குவிவதனால் வீதி போக்குவரத்து தினமும் சீரற்று காணப்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை நகர்பகுதி ,சாய்ந்தமருது ,மாளிகைக்காடு ,பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமை தொடர்வதற்கு காரணம் முறையான வழிகாட்டல்கள் முகாமைத்துவம் இன்மை போன்றன இன்மையால் இச்சீர்கேடு தொடர்ந்து வருகின்றது.
ஒரே நேரத்தில் இவ்வாறு எரிபொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மக்கள் வீதிகளின் இரு மருங்கிலும் தத்தமது வாகனங்களை நிறுத்தி பொதுப்போக்குவரத்தை தடை செய்யும் வண்ணம் தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் இச்செயற்பாடு கடந்த 2 மாதங்களாகவே தொடர்ந்து வருகின்றது.
இவர்களது செயற்பாடு குறித்து கருத்துக்களை தெரிவித்த பொலிஸ் உயர் நிலை அதிகாரி குறித்த எரிபொருள் கொள்வனவிற்காக வருபவர்கள் 25 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.ஒவ்வொருவரும் முக்கிய தனியார் அரச பணிகளை மேற்கொள்பவர்கள்.இவர்களுக்கு எம்மால் வழிநடத்த ஒன்றுமில்லை.அவர்களாகவே இந்நிலைமையை உணர வேண்டும்.சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாகவே அனைவரது வேலைகளையும் சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என்றார்.
தினமும் எரிபொருளுக்காக இவ்வாறு குவிகின்ற மக்கள் எவ்வித ஒழுங்கு முறைகளையும் பின்பற்றாமல் முரண்பாடுகளை தமக்கிடையே ஏற்படுத்துவதும் பின்னர் வீதி மறியலில் ஈடுபட்டு எரிபொருள் நிலையத்தை தாக்க முயல்கின்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :