மஹியங்கனை கிரந்துருக்கோட்டை பிரதேசத்திலிருந்து 2 கறவை பசுக்கள் மீட்ப்புஇரா சுரேஷ்குமார்-
ஹியங்கனை கிரந்துருக்கோட்டை பிரதேசத்திலிருந்து பதுளை பிட்டிய இறைச்சிக் கடைக்கு இறைச்சிக்காக கொண்டுவரப்பட்ட 2 கறவை பசுக்கள் பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் இருவருடன் இரண்டு பசுக்களும் மீட்கப்பட்டுள்ளன.

மஹியங்கனை கிரந்துருக்கோட்டை பிரதேசத்தில் கறவை பசுக்கள் காணாமல் போனது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவுக்கு தகவல் பெற்றுக் கொடுக்கப்பட்டது கறவை பசுக்கள் காணாமல் போன முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் , தேடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது இதனை அடுத்து நேற்றைய தினம் கிடைக்கப்பட்ட ரகசிய தகவலையடுத்து பதுளை பிட்டிய பிரதேசத்தில் பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் இருவருடன் இரண்டு பசுக்களும் மீட்கப்பட்டுள்ளன கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார் மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :