ரணிலின் தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை – சுமந்திரன்!



ணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை
ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற தெரிவில் சட்டபூர்வமான அங்கிகாரம் இல்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளமை குறித்து த இந்து நாளிதழுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார். மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானப் பிரேரணைக்கு எதிராக நாடாளுமன்றம் விரைவில் முடிவை காண்பிக்கும், ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற தெரிவில் சட்டபூர்வமான அங்கிகாரம் இல்லை. அவர் தனது தொகுதியில் கூட இம்முறை வெற்றி பெறவில்லை எனவும் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :