ஏறாவூரில் அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு எதிராக மஞ்சிப் பெட்டி எரித்து ஆர்ப்பாட்டம்!


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அமைச்சுப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளதற்கு எதிராக அவரது சொந்த ஊரிலே மக்கள் எதிப்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஈடுபட்டிருந்தனர்.

அமைச்சரின் உருவப்படம் தாங்கிய பதாகைக்கு நாணையத்தாள்களின் மாலை இடப்பட்டு, பின்னர் மஞ்சிபெட்டி ஒன்றின்மீது வைத்து வீதியில் வலம்வந்து நஸீர் அஹமட் ஒழிக என கோசமிட்டு, பின்னர் அதனை எரித்துள்ளனர்.

நாட்டுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய அரசில் அமைச்சுப் பொறுப்பை ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது என இதன்போது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :