பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரனின் புத்தாண்டு வாழ்த்து



தலவாக்கலை பி.கேதீஸ்-
பிறக்கும் இப்புத்தாண்டு இலங்கை வாழ் சமூகத்தினருக்கு வளமான வாழ்வும் குறைவற்ற செல்வமும், கிடைத்திட வேண்டும். சித்திரைப்பிறப்பு சகல வகையிலும் வசந்தத்தை உருவாக்கக்கூடியது. இன,மத, மொழி,சாதி,சமய வேறுபாடுகளைக் கலைந்து எல்லோரும் ஒருதாய் மக்களென உலகறியச்செய்யும் சிறப்பு நாளாகும். இச்சித்திரைப்புத்தாண்டில் மனிதம் நிரந்தரமாய் நிலைத்து புதிய சாதனைகளையும், வெற்றிகளையும் பெற்று வழிமறிக்கும் தடைகளைத் தகர்த்து மகிழ்ச்சி பொங்கும் நன்நாளாக அமைய இறைவனை பிராத்திப்பதோடு இந்நாளில் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

பிறக்கும் இச்சித்திரைப் புத்தாண்டு நமது பலம், ஒற்றுமை என்பவற்றை நிலை நிறுத்தி எழுச்சி கொள்ளும் சமூகமாய் இன்புற்று வாழ்வதற்கு வழிசமைக்கட்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார சிக்கலினால் எமது நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இது நிரந்தரமான ஒன்றல்ல நிச்சயமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலை நலமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. மிகவிரைவில் எமது நாடு சுபீட்சம் பெறும். நாம் என்னதான் புறக்கணிக்கப்பட்டாலும் ஒதுக்கப்பட்டாலும் கூட தமது தெய்வ நம்பிக்கை, விருந்தோம்பல்,தொழில் கடமைகள்;, இவை எதிலுமே நாம் புறக்கணிக்கப்படவில்லை. எமது இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டும் அதற்கு நாங்கள் தொலைநோக்கு சிந்தனையோடு செயற்படவேண்டும் எனவே எல்லாம் வல்ல இறைவன் எமது மக்களுக்கு வழங்கியுள்ள திடமான மனநிலையும் கிடைத்ததை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் பண்பும் தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமெனவும் எதிர்வரும் காலங்களை நாமே சிறப்பாக்கிக் கொள்ளும் மன உறுதியை எமது மக்கள் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :